புதன், 20 ஜூலை, 2011

உங்கள் மனதில் உள்ள சாப்ட்வேர் பிரச்சனை தீர...

         அனைத்து மனிதர்களுக்கும் மனம் என்ற software வடிவமைப்பு ஒன்றுதான் எனவே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வும் ஒன்றுதான்

       நேரடியாக கூறுகிறேன்..........  சொல்லப்போனால் சுற்றுலா செல்ல எல்லோருக்குமே ஆசை உண்டு. ஆனால் சோம்பேறித்தனம் அல்லது வீண் செலவு என்ற எண்ணம்அல்லது வேளைபளு அதிகமாக இருப்பது போன்ற மாயையில் உங்கள் மனம்  சிக்கும் காரணங்களால் இந்த ஆசை நிறைவேறாது போகலாம்.

     சிலர் கேட்கலாம் இவ்வளவு செலவு செய்து நாம் சுற்றுலா செல்லதான் வேண்டுமா? என்று.

         சுற்றுலா.............. செல்வதற்காக அல்ல. நம் மனதின் எண்ண ஓட்டத்தில் ஒரு மாறுதலை உருவாக்குவதற்காக. இந்த மாறுதலை உருவாக்கி என்ன பயன் வரப்போகிறது என்றுகூடகேள்வி எழலாம். நாம்  விரும்பியோ,  விரும்பாமலோ  சில சமூக வட்டத்தில்  மாட்டி சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதை யாருமே உணராமல் இருக்கிறோம் என்பது தான் வேடிக்கை. இதனை உணர்ந்தந்தவர்கள் இருந்தாலும் அவர்களின் மனம் வேறு கோணத்தில் எண்ணாததால்,எண்ணமுடியாததால் அவர்களாலும்  அவ்வட்டத்தைவிட்டு வெளியேற முடிவதில்லை.

          (எ.டு)  ஒருவர் பஸ் டிரைவராக வேலை பார்ப்பவர் பஸ்சை எடுப்பதற்கு முன்பு பஸ் டிப்போவில்  வருகை கையொப்பம் இடுகிறார். பஸ்சை எடுத்துக்கொண்டு தன் ஊரில் இருந்து புறப்பட்டு  செல்கிறார். இடையே ஒரு டீ ஸ்டாலில் வண்டியை நிறுத்துகிறார். டீ குடிக்கிறார். பிறகு மீண்டும் கிளம்பி தன் இலக்கான ஊருக்கு சென்றதும் பஸ்சை நிறுத்திவிட்டு. உணவு உண்கிறார்  நாட்டில் நிலவும்நிகழ்வுகளை தானும் கண்டக்டரும் பேசுகின்றனர். சிறிது நேரத்திற்கு பின் திருபவும் அந்த ஊரில் இருந்து கிளம்பி தன் ஊருக்கு வருகிறார். பின் வண்டியை ஒப்படைத்துவிட்டு  தன் வீட்டீற்கு செல்கிறார். சிறிது நேரம் தன் மனைவியிடம் வீட்டின் பிரச்சனைகளை கேட்டுவிட்டு தீர்வுகாண யோசனை செய்கிறார். இடை இடையே நாளை புறப்படும் எண்ணமும் தலைத்தூக்குகிறது.அடுத்த நாள் வண்டி ஓட்ட ஓய்வு தேவை. ஓய்வுக்காக உறங்குகிறார். மறுபடியும் அடுத்த நாள் காலையில்  பஸ்சை எடுப்பதற்கு முன்பு பஸ் டிப்போவில்  வருகை கையொப்பம் இடுகிறார். பஸ்சை எடுத்துக்கொண்டு தன் ஊரில் இருந்து புறப்பட்டு  செல்கிறார். இடையே திரும்பவும் அதே டீ ஸ்டாலில் வண்டியை நிறுத்துகிறார். டீ குடிக்கிறார். பிறகு மீண்டும் கிளம்பி தன் இலக்கான ஊருக்கு சென்றதும் பஸ்சை நிறுத்திவிட்டு. உணவு உண்கிறார்  நாட்டின் நிகழ்வுகளை தன் கண்டக்டர் உடன் பேசுகிறார். சிறிது நேரத்திற்கு பின் திருபவும் அந்த ஊரில் இருந்து கிளம்பி தன் ஊருக்கு வருகிறார். பின் வண்டியை ஒப்படைத்துவிட்டு  தன் வீட்டீற்கு செல்கிறார்.அன்றும் சிறிது நேரம் தன் மனைவியிடம் வீட்டின் பிரச்சனைகளை கேட்டுவிட்டு தீர்வுகாண யோசனை செய்கிறார். இடை இடையே நாளை புறப்படும் எண்ணம் தலைத்தூக்குகிறது. ஓய்வுக்காக உறங்குகிறார். மறுபடியும் தன் ஊரில் இருந்து புறப்பட்டு  செல்கிறார்.
               
                      இதுப்போலவே ஒவ்வொரு நாளும் இந்த எண்ணவட்டத்திலேயே சுழல்வதால். இயல்பான எண்ணம் கொண்ட மனிதராக அவரால் ஒரு நாளும் வாழ முடிவதில்லை. அதேப்போல் அவரின் ஒற்றை சுழற்சி எண்ண ஓட்டத்தால் எளிய பிரச்சனைகளுக்கு கூட  அவரால் தீர்வு காணவும் முடிவதில்லை. எண்ணங்கள் புதிய கோணத்தை நோக்கி செல்வதில்லை. இவ்வட்டத்தை விட்டால் வேறுவழியும் இல்லை என்பது போல் இவரின்  மனம் பணிந்துவிட்டது.


                       இதற்கு ஒரே தீர்வு சுற்றுலா அன்றி வேறு இல்லை.

    ஒரு வருடத்திற்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செல்லவும்(காலாண்டு, அரையாண்டு, முழாண்டு).  இதனால்  லாபமே ஒழிய நட்டம் இல்லை. உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ சென்று வாருங்கள். உங்கள் மனதை ரீச்சார்ஜ் செய்யுங்கள்.பிரச்சனைக்கு உள்ளே இருந்து கொண்டு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. பிரச்சனைக்கு வெளியில் நில்லுங்கள் வெற்றி காணுங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.

                                                                      நன்றி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...