இதற்கு சாதாரண உயிர் வாழ் விதிகளே போதுமானது. மனிதன் முதலில் செடிகளில் மரங்களில் விளைந்த பழங்கள், காய்கறிகள், பயிர்கள் முதலியானவற்றை உண்டுவந்தான் என்பதே உண்மை. அன்றாட வாழ்விலேயே எடுத்து கொண்டால். கோழிகறி திண்பவர்களுக்கு, ஆட்டுக்கறி உண்ண மனது வராது. பன்னி, மாடு, குதிரை, எலி, போன்ற கறிகளை காட்டினால் திண்பார்களா?.. மூக்கை பிடித்து ஓடிவிடுவார்கள். அதுவே இரைச்சி உண்ணும் விலங்கிடம் தந்தால் பாய்ந்து வந்து விழுங்கிவிடும். ஆட்டுக்கறிக்கும், மாட்டுகறிக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால் மனிதன் உண்ண மறுக்கிறான். கறி உண்ணும் மனிதனே மற்ற கறியை வெறுக்கிறான் என்றால் காய்கறிகளை, பழங்களை, பயிர்களை உண்ட மனிதன் எப்படி இறைச்சியை உண்ணுபவனாக மாறி இருக்க முடியும்.
காலங்கள் தான் மனிதனை மாற்றுகிறது. இதன் பெயர்தான் பரிணாமவளர்ச்சி. பயிர்களை உண்ட மனிதனின் கடுமையான மனதை மாற்ற அதைவிட கடுமையான சூழ்நிலையால் தான் முடியும். இது உயிரை கொள்ளும் மனநிலை. இதை ஒரு உண்மை சம்பவத்தால் விளக்க முயல்கிறேன். ஒரு மேல்நாட்டவர். கடினமான மலைகளில் ஏற்றம் செய்வது இவரின் பொழுதுபோக்கு. ஒருநாள் இவர் மலைஏறும் பொழுது கயிறு அருந்து 23 அடிபள்ளத்தில் விழுந்துவிட்டார். கால் உடைந்துவிட்டது. கத்தினார் அலறினார் ஆனால் அது ஒரு காடு என்பதால் அருகில் யாருமே இல்லை. இரண்டு நாட்கள் கத்தியதால் இவர் மயக்க நிலைக்கு வந்துவிட்டார். அடுத்தநாள் அவருக்கு முழிப்பு வந்தவுடன் மீண்டும் கத்தினார். பிறகு பசியால் அவரின் காதுகள் அடைத்து கத்த திரானி அற்று அரை மயக்க நிலையிலேயே இருந்தார். ஆறு நாட்களுக்கு பிறகு அவரின் மூளை கொடுரமான எண்ணங்களை எழுப்பியது. அவரின் உடலை அவரே உண்ண கட்டளை இட்டது. இது சாத்தியமா என்றால். சாத்தியம். இது தான் உயிர் வாழ் தந்திரமும் கூட. அந்த கட்டளைகளை அவர் மறுத்தலும் பிறகு நேரம் ஆக ஆக அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அவரின் கால்களை அவரே உண்ணத்தொடங்கினார். வலிக்காதா என்று கேட்கலாம்….இதையே அவரிடம் கேட்டதற்கு அந்த நினைப்பே வரவில்லை என்கிறார். எட்டு நாட்களுக்கு பிறகு காப்பாற்றபட்டார். உடனடி மருத்துவத்தால் பழைய நிலைக்கு திரும்பினார்.
இவ்வுண்மை சம்பவத்தால் நாம் அறிவது என்னவென்றால் நம்மூளைவாழ்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது தான். உணவு கிடைக்காதவறட்சி சமையங்களில் நம்மூளை இறைச்சி உண்ண தூண்டி இருக்க
வேண்டும். தூண்டாதவர்கள் மாண்டு இருப்பார்கள்.
அந்த சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறாதவனின் தலைமுறை அழிக்கப்படும். இதுவே இயற்க்கை விதி. புயலில் வளைந்து கொடுக்கும் நாணல் புல் உயிர்வாழும். வளையாமல் எதிர்த்து நிற்கும் மரங்கள் புயலின் ஆற்றலால் அழிக்கப்படும். அதுபோல் தான் மனிதன் இறைச்சி உண்ண பழகியதும். அவன் அதன் சுவை உணர்ந்தான். இப்பழக்கமே மனிதனை இன்றளவும் அழிக்க முடியாத இனமாக எச்சூழ்நிலையையும் சமாளிக்கும் இனமாக மாற்றம் பெற்றான். தற்போதும் நம்மிடம் அந்த குணம் இயல்பாகவே தங்கிவிட்டது. இப்பொழும் மனித இனம் அழியாமல் இருப்பதற்கு காரணம் இந்தபழக்கம் தான் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். ஏன் என்றால் கடினமான சூழ்நிலை வாய்த்தால் தான் மனிதன் மாற்றம் பெறுவான். தற்போது இறைச்சியை உண்ணலாம? கூடாதா?. நமக்கு ஏற்றதா? இல்லையா? என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறான். சூழ்நிலையினால் தள்ளப்பட்ட நாம் அச்சூழ்நிலை மாறியபோதும் அவனால் நிறுத்த இயலவில்லை. விருப்பம் இருப்பவர்கள் உண்ணுங்கள், விருப்பம் இல்லாதவர்கள் உண்ணாதீர்கள்…என்று கூறி முடிக்க நான் தேவை இல்லை. இரைச்சி உண்ணக்கூடாது என்று நான் சொல்லவில்லை. உடலின் வடிவமைப்பு ஏற்றவாறு உணவுகள் அமைந்தால் முழு ஆற்றல் கிடைப்பது சுலபம். எதிர்மறையாக அமைந்தால் அனைத்து செயல்பாடுகளுமே கடினம்.
V.KAVEANANTH & V.NANDHANA
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!