வியாழன், 10 பிப்ரவரி, 2011

சென்சஸ் கணக்கெடுப்பு

சென்சஸ்  2011

இது ரேஷன் கார்டுக்கோ, எலக்‌ஷன் கார்டுக்கோ அல்ல 




     இது  நம் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வேலை என்று கூட சொல்லலாம்..... இக்கணக்கெடுப்பு  இம்மாதம் [பிப்ரவரி]  9 முதல் 28 வரை நடைபெறுகிறது என்பதை அறிந்து இருப்பீர்கள்...
நாடு முன்னேற வேண்டும்...... வறுமையை ஒழிக்க வேண்டும்......100% கல்வி அறிவு பெற வெண்டும்...... என்று அனைவரும் ஆதங்கப்படுபவது... இயல்பு.
ஆதங்கத்தை நிறைவேற்ற ஒரு வழியே இந்த  சென்சஸ்  2011.
சென்சஸ் எடுக்க சரியான் தகவல்கலளை தேடி வருகிறார்கள்.




                நம்முடைய தகவல்கள் ரகசியமாக வைத்துகொள்ளப்படும் என்பது உறுதி( சுப்ரிம் கோர்ட்-ஆல்  கூட இத்தகவலை கேட்க உரிமை இல்லை என்பது கூடுதல் தகவல்)


            
          சென்சஸ் எழுதுபவர்கள் உங்களிடம்  பெயர், பிறந்த தேதி, திருமணத்தின் போது வயது, பிறந்த இடம் உட்பட மொத்தம் 29 வகையான் கேள்விகள் கேட்கவருகிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது 10 நிமிடங்களாவது தேவைப்படும். எடுத்த தகவல்களை வீட்டிற்கு சென்று முறையாக திரும்ப எழுத வேண்டி உள்ளது. மேலும் அதை தொடர்ந்து பல வேலைகளை முடிக்க வேண்டி உள்ளது. கண்கெடுப்பின் போது பலர் வேலைக்கு சென்று விடுவதால் திரும்ப திரும்ப அதே வீட்டிற்கு வர வேண்டியும் உள்ளது. இது மட்டும் அல்லாமல் நம் வீட்டில் அவர்கள் வரும்போது படிப்பறிவு இல்ல வீட்டு உறுப்பினர்கள் இருப்பார்களானால் முழுதகவல்களையும் பெற முடியாததால் மறுபடியும் சரியான நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் ஒவ்வொரு அதிகாரிக்கும் 200 குடும்பங்கள்  வரை எடுக்க வேண்டும் என்பதால் அவர்கள் நேரம் இன்மை காரணமாக தகவல்களை அவசரமாக எழுதி தவறு எற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களின் பொன்னான் நேரத்தை மிச்சபடுத்தி செம்மையாக பணியை செய்ய நாமும் உதவ வேண்டியது நம் கடமை.

எனவே, நம் கடமை என்ன?

           அவர்கள் வரும்போது நாம் வைத்திருக்கவேண்டிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் உள்ளது,   மீதி கேள்விகள் எளிது என்பதால் அதை இங்கு கொடுக்கவில்லை..இவ்வட்டவணையை அவர்கள் வரும் முன்னரே எழுதி வைத்திருக்கவும். அவ்வளவு தான்.......

           இதனால்  நம் வீட்டில் அவர்கள் வரும்போது படிப்பறிவு இல்ல வீட்டு உறுப்பினர்கள் இருப்பார்களானால் அவர்கள் பதற்றம் தணியும்.... முன்னரே எழுதி வைத்தலால் அவர்கள் பணியும் தவறு இன்றி செய்ய முடியும்.

நன்றி....
     தவறான தகவல் நம்மை பல ஆண்டு காலம் பின்னோக்கி தள்ளும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.  தயவு செய்து தவறான தகவல்களை அளிக்கதீர்கள்....... இனி வரும் வருங்காலத் திட்டங்கள் அனைத்தும் இவற்றின் அடிப்படையிலே தீட்டபடும்.          


(பின் குறிப்பு: தவறான தகவலுக்கு தண்டணையும் உண்டு).


வ.
எண்
பெயர்
உறவு
முறை 
பிறந்த
தேதி 
பிறந்த
இடம்
திருமண
தேதி
மதம்
தாய்
மொழி

கல்வி

வேலை
1.











2.











3.











4.











5.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...