செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

மனிதன் எப்படி உணவாக இறைச்சியை தேர்ந்து எடுத்தான் ?


         இதற்கு சாதாரண உயிர் வாழ் விதிகளே போதுமானது. மனிதன் முதலில் செடிகளில் மரங்களில் விளைந்த பழங்கள், காய்கறிகள், பயிர்கள் முதலியானவற்றை உண்டுவந்தான் என்பதே உண்மை. அன்றாட வாழ்விலேயே எடுத்து கொண்டால். கோழிகறி திண்பவர்களுக்கு, ஆட்டுக்கறி உண்ண மனது வராது. பன்னி, மாடு, குதிரை, எலி, போன்ற கறிகளை காட்டினால் திண்பார்களா?.. மூக்கை பிடித்து ஓடிவிடுவார்கள். அதுவே இரைச்சி உண்ணும் விலங்கிடம் தந்தால் பாய்ந்து வந்து விழுங்கிவிடும். ஆட்டுக்கறிக்கும், மாட்டுகறிக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால் மனிதன் உண்ண மறுக்கிறான். கறி உண்ணும் மனிதனே மற்ற கறியை வெறுக்கிறான் என்றால் காய்கறிகளை, பழங்களை, பயிர்களை உண்ட மனிதன் எப்படி இறைச்சியை உண்ணுபவனாக மாறி இருக்க முடியும்.
           காலங்கள் தான் மனிதனை மாற்றுகிறது. இதன் பெயர்தான் பரிணாமவளர்ச்சி. பயிர்களை உண்ட மனிதனின் கடுமையான மனதை மாற்ற அதைவிட கடுமையான சூழ்நிலையால் தான் முடியும். இது உயிரை கொள்ளும் மனநிலை. இதை ஒரு உண்மை சம்பவத்தால் விளக்க முயல்கிறேன். ஒரு மேல்நாட்டவர். கடினமான மலைகளில் ஏற்றம் செய்வது இவரின் பொழுதுபோக்கு. ஒருநாள் இவர் மலைஏறும் பொழுது கயிறு அருந்து 23 அடிபள்ளத்தில் விழுந்துவிட்டார். கால் உடைந்துவிட்டது. கத்தினார் அலறினார் ஆனால் அது ஒரு காடு என்பதால் அருகில் யாருமே இல்லை. இரண்டு நாட்கள் கத்தியதால் இவர் மயக்க நிலைக்கு வந்துவிட்டார்.  அடுத்தநாள் அவருக்கு முழிப்பு வந்தவுடன் மீண்டும் கத்தினார். பிறகு பசியால் அவரின் காதுகள் அடைத்து கத்த திரானி அற்று அரை மயக்க நிலையிலேயே இருந்தார். ஆறு நாட்களுக்கு பிறகு அவரின் மூளை கொடுரமான எண்ணங்களை எழுப்பியது. அவரின் உடலை அவரே உண்ண கட்டளை இட்டது. இது சாத்தியமா என்றால். சாத்தியம். இது தான் உயிர் வாழ் தந்திரமும் கூட. அந்த கட்டளைகளை அவர் மறுத்தலும் பிறகு நேரம் ஆக ஆக அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அவரின் கால்களை அவரே உண்ணத்தொடங்கினார். வலிக்காதா என்று கேட்கலாம்….இதையே அவரிடம் கேட்டதற்கு அந்த நினைப்பே வரவில்லை என்கிறார். எட்டு நாட்களுக்கு பிறகு காப்பாற்றபட்டார். உடனடி மருத்துவத்தால் பழைய நிலைக்கு திரும்பினார்.

       இவ்வுண்மை சம்பவத்தால் நாம் அறிவது என்னவென்றால் நம்மூளைவாழ்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது தான். உணவு கிடைக்காதவறட்சி சமையங்களில் நம்மூளை இறைச்சி உண்ண தூண்டி இருக்க 
வேண்டும். தூண்டாதவர்கள் மாண்டு இருப்பார்கள்.


     அந்த சமயத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறாதவனின் தலைமுறை அழிக்கப்படும். இதுவே இயற்க்கை விதி. புயலில் வளைந்து கொடுக்கும் நாணல் புல் உயிர்வாழும். வளையாமல் எதிர்த்து நிற்கும் மரங்கள் புயலின் ஆற்றலால் அழிக்கப்படும். அதுபோல் தான் மனிதன் இறைச்சி உண்ண பழகியதும். அவன் அதன் சுவை உணர்ந்தான். இப்பழக்கமே மனிதனை இன்றளவும் அழிக்க முடியாத இனமாக எச்சூழ்நிலையையும் சமாளிக்கும் இனமாக மாற்றம் பெற்றான். தற்போதும் நம்மிடம் அந்த குணம் இயல்பாகவே தங்கிவிட்டது. இப்பொழும் மனித இனம் அழியாமல் இருப்பதற்கு காரணம் இந்தபழக்கம் தான் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். ஏன் என்றால் கடினமான சூழ்நிலை வாய்த்தால் தான் மனிதன் மாற்றம் பெறுவான். தற்போது இறைச்சியை உண்ணலாம? கூடாதா?. நமக்கு ஏற்றதா? இல்லையா? என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறான். சூழ்நிலையினால் தள்ளப்பட்ட நாம் அச்சூழ்நிலை மாறியபோதும் அவனால் நிறுத்த இயலவில்லை. விருப்பம் இருப்பவர்கள் உண்ணுங்கள், விருப்பம் இல்லாதவர்கள் உண்ணாதீர்கள்…என்று கூறி முடிக்க நான் தேவை இல்லை. இரைச்சி உண்ணக்கூடாது என்று நான் சொல்லவில்லை. உடலின் வடிவமைப்பு ஏற்றவாறு உணவுகள் அமைந்தால் முழு ஆற்றல் கிடைப்பது சுலபம். எதிர்மறையாக அமைந்தால் அனைத்து செயல்பாடுகளுமே கடினம். 

புதன், 20 ஜூலை, 2011

உங்கள் மனதில் உள்ள சாப்ட்வேர் பிரச்சனை தீர...

         அனைத்து மனிதர்களுக்கும் மனம் என்ற software வடிவமைப்பு ஒன்றுதான் எனவே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வும் ஒன்றுதான்

       நேரடியாக கூறுகிறேன்..........  சொல்லப்போனால் சுற்றுலா செல்ல எல்லோருக்குமே ஆசை உண்டு. ஆனால் சோம்பேறித்தனம் அல்லது வீண் செலவு என்ற எண்ணம்அல்லது வேளைபளு அதிகமாக இருப்பது போன்ற மாயையில் உங்கள் மனம்  சிக்கும் காரணங்களால் இந்த ஆசை நிறைவேறாது போகலாம்.

     சிலர் கேட்கலாம் இவ்வளவு செலவு செய்து நாம் சுற்றுலா செல்லதான் வேண்டுமா? என்று.

         சுற்றுலா.............. செல்வதற்காக அல்ல. நம் மனதின் எண்ண ஓட்டத்தில் ஒரு மாறுதலை உருவாக்குவதற்காக. இந்த மாறுதலை உருவாக்கி என்ன பயன் வரப்போகிறது என்றுகூடகேள்வி எழலாம். நாம்  விரும்பியோ,  விரும்பாமலோ  சில சமூக வட்டத்தில்  மாட்டி சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதை யாருமே உணராமல் இருக்கிறோம் என்பது தான் வேடிக்கை. இதனை உணர்ந்தந்தவர்கள் இருந்தாலும் அவர்களின் மனம் வேறு கோணத்தில் எண்ணாததால்,எண்ணமுடியாததால் அவர்களாலும்  அவ்வட்டத்தைவிட்டு வெளியேற முடிவதில்லை.

          (எ.டு)  ஒருவர் பஸ் டிரைவராக வேலை பார்ப்பவர் பஸ்சை எடுப்பதற்கு முன்பு பஸ் டிப்போவில்  வருகை கையொப்பம் இடுகிறார். பஸ்சை எடுத்துக்கொண்டு தன் ஊரில் இருந்து புறப்பட்டு  செல்கிறார். இடையே ஒரு டீ ஸ்டாலில் வண்டியை நிறுத்துகிறார். டீ குடிக்கிறார். பிறகு மீண்டும் கிளம்பி தன் இலக்கான ஊருக்கு சென்றதும் பஸ்சை நிறுத்திவிட்டு. உணவு உண்கிறார்  நாட்டில் நிலவும்நிகழ்வுகளை தானும் கண்டக்டரும் பேசுகின்றனர். சிறிது நேரத்திற்கு பின் திருபவும் அந்த ஊரில் இருந்து கிளம்பி தன் ஊருக்கு வருகிறார். பின் வண்டியை ஒப்படைத்துவிட்டு  தன் வீட்டீற்கு செல்கிறார். சிறிது நேரம் தன் மனைவியிடம் வீட்டின் பிரச்சனைகளை கேட்டுவிட்டு தீர்வுகாண யோசனை செய்கிறார். இடை இடையே நாளை புறப்படும் எண்ணமும் தலைத்தூக்குகிறது.அடுத்த நாள் வண்டி ஓட்ட ஓய்வு தேவை. ஓய்வுக்காக உறங்குகிறார். மறுபடியும் அடுத்த நாள் காலையில்  பஸ்சை எடுப்பதற்கு முன்பு பஸ் டிப்போவில்  வருகை கையொப்பம் இடுகிறார். பஸ்சை எடுத்துக்கொண்டு தன் ஊரில் இருந்து புறப்பட்டு  செல்கிறார். இடையே திரும்பவும் அதே டீ ஸ்டாலில் வண்டியை நிறுத்துகிறார். டீ குடிக்கிறார். பிறகு மீண்டும் கிளம்பி தன் இலக்கான ஊருக்கு சென்றதும் பஸ்சை நிறுத்திவிட்டு. உணவு உண்கிறார்  நாட்டின் நிகழ்வுகளை தன் கண்டக்டர் உடன் பேசுகிறார். சிறிது நேரத்திற்கு பின் திருபவும் அந்த ஊரில் இருந்து கிளம்பி தன் ஊருக்கு வருகிறார். பின் வண்டியை ஒப்படைத்துவிட்டு  தன் வீட்டீற்கு செல்கிறார்.அன்றும் சிறிது நேரம் தன் மனைவியிடம் வீட்டின் பிரச்சனைகளை கேட்டுவிட்டு தீர்வுகாண யோசனை செய்கிறார். இடை இடையே நாளை புறப்படும் எண்ணம் தலைத்தூக்குகிறது. ஓய்வுக்காக உறங்குகிறார். மறுபடியும் தன் ஊரில் இருந்து புறப்பட்டு  செல்கிறார்.
               
                      இதுப்போலவே ஒவ்வொரு நாளும் இந்த எண்ணவட்டத்திலேயே சுழல்வதால். இயல்பான எண்ணம் கொண்ட மனிதராக அவரால் ஒரு நாளும் வாழ முடிவதில்லை. அதேப்போல் அவரின் ஒற்றை சுழற்சி எண்ண ஓட்டத்தால் எளிய பிரச்சனைகளுக்கு கூட  அவரால் தீர்வு காணவும் முடிவதில்லை. எண்ணங்கள் புதிய கோணத்தை நோக்கி செல்வதில்லை. இவ்வட்டத்தை விட்டால் வேறுவழியும் இல்லை என்பது போல் இவரின்  மனம் பணிந்துவிட்டது.


                       இதற்கு ஒரே தீர்வு சுற்றுலா அன்றி வேறு இல்லை.

    ஒரு வருடத்திற்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செல்லவும்(காலாண்டு, அரையாண்டு, முழாண்டு).  இதனால்  லாபமே ஒழிய நட்டம் இல்லை. உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ சென்று வாருங்கள். உங்கள் மனதை ரீச்சார்ஜ் செய்யுங்கள்.பிரச்சனைக்கு உள்ளே இருந்து கொண்டு எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. பிரச்சனைக்கு வெளியில் நில்லுங்கள் வெற்றி காணுங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள்.

                                                                      நன்றி!

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

என்ன ? ஓட்டு போட போறிங்களா.....

இதை ஒரு முறை படித்துவிட்டு   போங்க...  ஓட்டு போடுங்க.....   

   நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் அறுவடை செய்ய முடியும்.. இது படித்த மேதாவி, இளைஞர்களில் இருந்த படிக்காத ஏழை கிராமத்தான் வரை நன்றாகவே...தெரியும்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

சென்சஸ் கணக்கெடுப்பு

சென்சஸ்  2011

இது ரேஷன் கார்டுக்கோ, எலக்‌ஷன் கார்டுக்கோ அல்ல 




     இது  நம் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வேலை என்று கூட சொல்லலாம்..... இக்கணக்கெடுப்பு  இம்மாதம் [பிப்ரவரி]  9 முதல் 28 வரை நடைபெறுகிறது என்பதை அறிந்து இருப்பீர்கள்...
நாடு முன்னேற வேண்டும்...... வறுமையை ஒழிக்க வேண்டும்......100% கல்வி அறிவு பெற வெண்டும்...... என்று அனைவரும் ஆதங்கப்படுபவது... இயல்பு.
ஆதங்கத்தை நிறைவேற்ற ஒரு வழியே இந்த  சென்சஸ்  2011.
சென்சஸ் எடுக்க சரியான் தகவல்கலளை தேடி வருகிறார்கள்.

திங்கள், 31 ஜனவரி, 2011

இத பாரு நண்பா...

மக்களே….
           சொன்ன நம்ப மாட்டிங்க… சொல்லலனாலும் விடமாட்டிங்க….தெரியும் ஆன கேக்க மாட்டிங்க…தெரியலனாலும் தெரிஞ்சிக்காம விடமாட்டிங்க…… பார்த்தும் பார்க்கலனுவீங்க…… பார்க்கலனாலும் பார்த்த மாரியே பேசுவீங்க…. எதை கொடுத்தாலும் வாங்கிக்குவீங்க… வாங்கிட்ட எதை கொடுக்க கூடாதோ அதை கொடுத்திடுவீங்க… நல்லத சொன்னாலும் கேட்டுக்குவீங்க கெட்டத சொன்னாலும் ஏத்துக்குவீங்க…. தட்டி கேட்கற மாதிரியே போவீங்க…......தட்டி கொடுத்தா மறந்துடுவீங்க…இதையெல்லாம் உங்களுக்காகவும் செய்ய மாட்டிங்க மத்தவங்களுக்காகவும் செய்ய மாட்டிங்க….......செய்யாம இருக்கவும் மாட்டிங்க….

ஆன ஒன்னு மக்களே…… 
நீங்க............................ரொம்ம்ம்ம்ப பாவும்ம்ம்ம்ம்ம்…....…

வராங்க....வராங்க...

திரும்பவும் புழு(பணம்) வச்சி தூண்டில் போட்டு  மீன் (வாக்கு)  பிடிக்க வராங்க உங்கள ஏமாத்த வராங்க...........வராங்க...... உசாரு...உசாரு...
மறுபடியும் மாட்டிக்காம ஆலி போல  போடற தூண்டியும் போவக்கூடாது இனி மீன் -னு உங்கள நினைக்கவும் கூடாது.....மக்களே...
சரியான கட்சிக்கு ஓட்டு போடுங்க....இல்லைனா 49-ஒ பிரிவை பயன் படுத்துங்க....அசிங்க படாதீங்க... அசிங்கத்துக்கு வழிவிடதீங்க......

தப்பிக்க வழி இருக்கு மக்களே....
உசாரு....உசாரு....சொல்லிட்டேன் அம்புட்டுதேன்...

இந்த பதிவை எவ்வளவு பேருக்கு அனுப்பமுடியுமோ அனுப்புங்க மக்களே......

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உங்கள் ரேஷன் கார்டின் விபரங்களை சரிபார்க்க....

வீட்டில் இருந்தே நம்முடைய  ரேஷன் கார்டின் விபரங்களை சரிபார்க்க....நம் சிவில் சப்ளை துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு நம் ரேஷன் கார்டின் எண்ணே போதுமானது... இவ்வசதி புதுச்சேரி, காரைக்கால்,மாகே,யானம் மக்களுக்கு மட்டும்......



கிழே உள்ள முகவரி .....கிலிக் செய்யுங்கள்
http://egov.pon.nic.in/cardonline/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...